
Shatrughan Sinha, a former MP and union minister, attended a wedding function in Lahore.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சத்ருகன் சின்ஹா சனிக்கிழமையன்று பாகிஸ்தான் தொழில் அதிபர் மியான் ஆசாத் அஹ்ஸன் இல்லத் திருமண விழாவில் பாக். ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வியைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் எல்லையைக் கடந்து ஒரு அமைதிப்பாலத்தினை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக பாக். ஜனாதிபதி டிவிட்டில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சந்திப்பில் இருவரும் காஷ்மீர் குறித்து விவாதித்தாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் பாக். ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கை துணைக்கண்டத்தில் அமைதியை வளர்ப்பதற்கு வலுவான முன்னெடுப்புகள் தேவை என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவினை ரத்து செய்த பிறகு, அது இரண்டு பிராந்தியங்களா பிரிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தனது கவலையை பாக். ஜனாதிபதி டிவிட்டரில் தெரிவித்துள்ளதற்கு சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு விடுக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான கட்டுப்பாடுகளில் ஒன்றுதான், அங்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் நிலை. மத்திய அரசு தரப்பானது இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறிப்பிடுகிறது. மேலும், இயல்பான நிலை திரும்பும் பட்சத்தில் இந்த கட்டுப்பாடானது மௌ;ள நீக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
இந்த திருமண நிகழ்வுகளுக்கு முந்தைய நாளில், இந்த வருகையானது முற்றிலும் தனிப்பட்ட வருகை என்றும் உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ இதில் ஏதும் இல்லை என்றும் திரு சின்ஹா டிவிட்டரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mian Ahmed is the worthy grandson of the most celebrated filmmaker & pioneers of Pakistan film industry #MianEhsan.This is purely a personal visit nothing official, nor political about it. The Eshan family have visited us several times in the past & the last time for my son pic.twitter.com/0XkiKoZkNa
— Shatrughan Sinha (@ShatruganSinha) February 22, 2020