This Article is From Nov 02, 2018

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

மிசோரமில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நேற்று அறிவித்துள்ளது

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் லால் தான்ஹவலா வெளியிட்டார்

Aizawl:

மிசோரமில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நேற்று அறிவித்துள்ளது. அதில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பத்தாம் வகுப்பு முடித்த மற்றும் மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழக்குவதாக கூறப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் லால் தான்ஹவலாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதான திட்டம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களில் மிசோரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலுள்ளது. காங்கிரஸை மிசோரத்திலிருந்து வெளியேற்ற பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது.  

தான்ஹவலா 2008ஆம் ஆண்டிலிருந்து மிசோரமின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். மேலும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராவார். தேர்தல் அறிக்கையில் மிசோரமில்  மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பத்தாம் வகுப்பு முடித்த மற்றும் மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழக்குவதாக கூறப்பட்டுள்ளது.   

மேலும்  ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் விவசாய நில விதிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு பொருளாதார  முன்னேற்ற திட்டம் இரண்டும் தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மிசோரத்தில் நவம்.28-ம் தேதி தேர்தல் நடைபெறும் டிசம்பர் 11-ம் தேதி  மற்ற நான்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகளுடன் மிசோரத்தின்  தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.