This Article is From Jun 08, 2020

மிசோரம் மாநிலத்தில் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு!!

மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள், மால்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் லாக் டவுன் அறிவிப்பை மிசோரம் அறிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு!!

மற்ற மாநிலங்களிலும் லாக் டவுன் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளி வரலாம்.

Aizawl:

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் மிசோரம் மாநிலத்தில் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள், மால்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் லாக் டவுன் அறிவிப்பை மிசோரம் அறிவித்துள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கம் நாளையிலிருந்து தொடங்குகிறது. இந்த முடிவு முதல்வர் ஜோரம்தங்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலத்தல் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும்போது பாதிப்பு அதிகரித்துள்ளது.

இத்தனைக்கும் மிசோரத்தில் 42 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குணம் அடைய, மொத்தம் 41 பேர் மட்டுமே தற்போது கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.