This Article is From Feb 01, 2020

''2024-க்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்'' - நிதியமைச்சர் தகவல்

கடந்த ஜனவரி 1-ம்தேதி தேசிய அடிப்படைக் கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ரூ. 102 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

''2024-க்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்'' - நிதியமைச்சர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் 2020-21-ம் ஆண்டுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ. 1.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

New Delhi:

2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் UDAN திட்டத்திற்கு உதவும் வகையில் இந்த விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். 

இதேபோன்று மும்பை - அகமதாபாத், டெல்லி - லக்னோ நகரங்களை இணைக்கும் தனியார் தேஜஸ் ரயில்களைப் போன்று மேலும் ப்ரீமியம் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் 2020-21-ம் ஆண்டுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ. 1.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

'நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு உதவியாக UDAN திட்டம் செயல்படும். 2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.' என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 
 
cp8vk4ug

2-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளா நிர்மலா சீதாராமன்

போக்குவரத்து மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள போக்குவரத்து முறையை மேம்படுத்துதல், புதிய வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை ஒட்டுமொத்த அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 

இதேபோன்று ரயில்வே பாதைகளின் வழியே, சோலார் மின் தகடுகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2023-24-ம் ஆண்டில் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஏற்படுத்தப்படவுள்ளது. விரைவில் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வரும் என்றும், டெல்லி - மும்பை விரைவுச்சாலை 2023-க்குள் நிறைவு பெறும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

கடந்த ஜனவரி 1-ம்தேதி தேசிய அடிப்படைக் கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ரூ. 102 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.