This Article is From May 28, 2019

பிஎம்டபிள்யூ காரை ஓட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஒ ? - வைரல் வீடியோ

பிஎம்டபிள்யூவின் இந்த வீடியோவிற்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.

பிஎம்டபிள்யூ காரை ஓட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஒ ? - வைரல் வீடியோ

பலர் பிஎம்டபிள்யூ வீடியோவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்

கார் தயாரிப்புகளில் இரு வேறு  துருவங்களாக இருப்பவை பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ். கார்களில் புதுபுது தொழிற்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு நிகர் ஏதுமில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஒ தியேத்தர் ஜெத்ச்சே சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டது பிஎம்டபிள்யூ. அந்த வீடியோவிற்காக ஜெத்ச்சே போன்ற உருவ ஒற்றுமை உள்ள ஒருவரை பிஎம்டபிள்யூ  நடிக்க வைத்துள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஒ விற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைந்த இந்த வீடியோவில் இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது பிஎம்டபிள்யூ.

அந்த வீடியோவில் தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஓய்வு பெறும் ஜெத்ச்சே, தன் வீட்டிற்கு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் செல்கிறார். வீட்டிற்கு சென்ற பின் தனது பார்க்கிங் ஏரியாவில் இருந்து மெட்டாலிக் ஆரஞ்ச் பிஎம்டபிள்யூ ஐ8 ரோட்ச்தர் காரில் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

‘பல ஆண்டுகளாக ஆரோக்கியமான போட்டிக்கு நன்றி ஜெத்ச்சே' என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது. யூடியூபில் மூன்று மில்லியன் மக்களும் பேஸ்புக்கில் 1.5 மில்லியம் மக்களும் இதனை கண்டுள்ளனர்.

‘நான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வெறிதனமான ரசிகன். ஆனால் பிஎம்டபிள்யூ வின் இந்த வீடியோ சிறப்பாக உள்ளது' என ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.

பிஎம்டபிள்யூவின் இந்த வீடியோவிற்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ‘எங்கள் சிஇஒ இக்யூ(மெர்சிடிஸ் எலக்ட்ரிக் வாகனம்) மாறிவிட்டார்' என தெரிவித்தது.

Click for more trending news


.