This Article is From Sep 19, 2018

கோவாவில் தொடரும் குழப்பம்… விசிட் அடிக்கும் அமித்ஷா!

கோவாவில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை கைவசம் வைத்துள்ளது

கோவாவில் தொடரும் குழப்பம்… விசிட் அடிக்கும் அமித்ஷா!

பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் அமித்ஷா

Panaji:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கோவாவுக்கு பயணம் செய்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா. அவர், மாநிலத்தின் பாஜக தலைவர்களை சந்தித்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது. 

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் கோவா முதல்வர் பாரிக்கர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் இல்லாத நிலையில் கோவா மாநில நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்வது குறித்து தான் தற்போது பிரச்னை எழுந்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, காங்கிரஸ், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அதிகாரம் கோரியுள்ளது. கோவாவில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை கைவசம் வைத்துள்ளது. பாஜக 14 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இதனால், தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் தான் உள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது காங்கிரஸ் கட்சி.

பாஜக கூட்டணியில் இருக்கும் அமைச்சர் சுதின் தவாலிகரை, துணை முதல்வராக பொறுப்பேற்க வைக்க பாஜக எடுத்த முயற்சிகளுக்கும், அதன் கூட்டணியிலிருந்தே அதிருப்தி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதை சரிகட்டத்தான் இன்று கோவா பயணம் செல்கிறார் அமித்ஷா.

.