This Article is From Feb 16, 2019

அடேங்கப்பா....மனித உயரத்திற்கு முட்டைகோஸா..!!!

கடந்த ஒன்பது மாதங்களாக தங்களின் உழைப்பால் மனித அளவிற்கு ஒரு முட்டைகோஸை வளர்த்துள்ளனர்.

அடேங்கப்பா....மனித உயரத்திற்கு முட்டைகோஸா..!!!

மனித அளவிலான முட்டைகோஸ் உடன் ரோஸ்மேரி

Melbourne:

முட்டைகோஸ் கைக்கு அடங்கும் அளவில் நாம் பார்த்திருக்கோம். ஆனால், ஒரு மனிதன் அளவிற்கு பார்த்திருக்கோமா?

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதினர் கடந்த ஒன்பது மாதங்களாக தங்களின் உழைப்பால் மனித அளவிற்கு ஒரு முட்டைகோஸை வளர்த்துள்ளனர்.

ஜாக்கி மார்ஷில் வசிக்கும் ரோஸ்மேரி நார்வுட் மற்றும் சீன் காட்மேன் தான் இதனை செய்துள்ளனர். இந்த தம்பதினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்களது தோட்டத்தில் இந்த முட்டைகோஸை வளர்க்க ஆரம்பித்தனர்.

சிஎன்என் -க்கு பேட்டி அளிக்கும் போது, ‘நல்ல மழையும், வெயில் காலத்தில் நல்ல வெயிலாலும் தான் இந்த முட்டைகோஸ் சாகுபடி நல்லபடியாக அமைந்தது' என்றார் ரோஸ்மேரி.

சிறந்த பராமரிப்பால் தான் இது சாத்தியமானதாகவும் இந்த முட்டைகோஸ், இரண்டு வாரங்களுக்கான உணவை அளிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Click for more trending news


.