சென்னை - பாட்னா இரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் பணம் பறிப்பு!

கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னை - பாட்னா இரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் பணம் பறிப்பு!
Lucknow: 

சென்னை முதல் பீஹாரில் உள்ள பாட்னாவுக்கு செல்ல கூடிய கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று காலை,  உத்திர பிரதேச  மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

அதிகாலை 1.30 மணி அளவில், மணிக்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய இரயிலை, கொள்ளையர்கள் மறித்துள்ளனர். பின்பு, இரயில் பெட்டிக்குள் ஏறிய ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கத் தொடங்கினர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

12 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கி பணம், நகைகளை பறித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கொள்ளை சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பயணிகளில் ஒருவர், அவசர எண் 100க்கு போன் செய்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு   செய்துள்ள காவல் துறையினர், பாபுலி கோல் என்பவரின் தலைமை கீழ் இயங்கும் உள்ளூர் கொள்ளை கூட்டம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்

இரண்டு மணி நேர பரபரப்பிற்கு பிறகு, அலகாபாத்துக்கு இரயில் புறப்பட்டு சென்றது. கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், கங்கா காவேரி இரயிலில் பயணித்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................