தனி நபரை ‘தீவிரவாதியாக’ அறிவிக்க வழிசெய்யும் யூ.ஏ.பி.ஏ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

UAPA Bill in Rajya Sabha: கடந்த 24 ஆம் தேதியே இந்த மசோதா, லோக்சபாவில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தனி நபரை ‘தீவிரவாதியாக’ அறிவிக்க வழிசெய்யும் யூ.ஏ.பி.ஏ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

UAPA Amendment Bill 2019: ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 147 ஆதரவாகவும் 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 


New Delhi: 

UAPA Bill: தீவிரவாதத்துக்கு எதிரான யூ.ஏ.பி.ஏ திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று நிறைவேறியுள்ளது. இந்த மசோதா மூலம் தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்க முடியும். 

“தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. தீவிரவாதிகள் மனிதத்துக்கு எதிரானவர்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்த கடுமையான சட்டத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று மசோதா (UAPA Amendment Bill)குறித்து வாக்களிக்கும் முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

கடந்த 24 ஆம் தேதியே இந்த மசோதா, லோக்சபாவில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 147 ஆதரவாகவும் 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 

இந்த புதிய திருத்த மசோதா மூலம், அதிகராம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, “4 கட்ட பரிசீலனைக்குப் பிறகே இந்த சட்டம் செயல்படுத்தப்படும். எந்த வித மனித உரிமை மீறல்களும் இதன் மூலம் செய்யப்படாது” என்று உறுதியளித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................