This Article is From Jun 24, 2019

2 ’பணக்கார’ திருமணம்… மலைபோல குவிந்த குப்பை… செய்வதறியாமல் தவிக்கும் உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பல, தற்போது குப்பைகளாக அந்த இடத்திலேயே இருக்கின்றன

2 ’பணக்கார’ திருமணம்… மலைபோல குவிந்த குப்பை… செய்வதறியாமல் தவிக்கும் உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

இந்த திருமண நிகழ்ச்சி குறித்து அறிவிக்கப்பட்டபோதே, நீதிமன்றத்தில் நிகழ்ச்சிக்குத் தடை கோரி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Auli:

உத்தரகாண்ட் மாநிலத்தின் அவ்லி முனிசிபாலிட்டிக்கு உட்பட்டப் பகுதியில் தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் பணக்காரர்களான ‘குப்தா குடும்பத்தின்' திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திருமணம் நடத்திய இடத்தில்தான் தற்போது மலைபோல குப்பைகள் குவிந்துள்ளதாகவும், அதை எப்படி அப்புறப்படுத்துவது என்ற தெரியாமல் உள்ளூர் முனிசிபாலிட்டி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

அஜய் குப்தாவின் மகனான சூர்யகாந்தின் திருமணம்தான் அவ்லியில் ஜூன் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது. அதேபோல அதுல் குப்தாவின் மகனான ஷாஷங்கிற்கு ஜூன் 20 முதல் 22 வரை திருமணம் நடந்தது. 

இந்த திருமண நிகழ்ச்சி குறித்து அறிவிக்கப்பட்டபோதே, நீதிமன்றத்தில் நிகழ்ச்சிக்குத் தடை கோரி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்கள், கத்ரீனா கயிஃப் உட்பட பாலிவுட் பிரபலங்கள், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராம்தேவ், திருமண நிகழ்ச்சியில் 2 மணி நேர யோகா நிகழ்ச்சியும் நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களை திருமணம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஹெலிகாப்ட்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. 

இந்த இரண்டு ‘பணக்கார' திருமணங்களையொட்டி, அருகிலிருந்த அனைத்து உணவகங்கள் மற்றும் ரிசார்ட்களில் இருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஸ்விட்சர்லாந்திலிருந்து இந்த திருமணத்தையொட்டி மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பல, தற்போது குப்பைகளாக அந்த இடத்திலேயே இருக்கின்றன. அதை அந்த இடத்தில் இருந்து நீக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

“மலைப் பகுதியான இந்த இடத்தில் திருமணத்தால் பெருமளவிலான குப்பை உருவாகியுள்ளது. இதுவரை நாங்கள் கலெக்ட் செய்த குப்பைகள், 40 குவின்டால்களைத் தாண்டி சென்றுள்ளது” என்று குழுவிலிருந்த ஒருவர் கூறுகிறார்.

“எங்கள் மாடுகள் இங்குதான் மேயும். ஆனால், எல்லா இடத்திலும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருக்கின்றன. எங்கள் மாடுகள் அந்த பிளாஸ்டிக்கை சாப்பிட்டு எதாவது ஆனால், யார் பொறுப்பேற்பார்கள். தற்போது இங்கு மோசமான நிலைமை நிலவுகிறது” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஆதங்கப்பட்டுள்ளார் உள்ளுர்வாசி ஒருவர். 

.