This Article is From Jul 16, 2018

ஜம்மு காஷ்மீர் நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியார் பாபா என்கிற நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்தது

Jammu:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியார் பாபா என்கிற நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா என்கிற நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத்தளத்தில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

உற்சாகமாக இவர்கள் நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு கீழே விழத் துவங்கின.

இதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்க மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பலியானவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.