This Article is From Dec 04, 2019

எல்லையில் 2 இடங்களில் பனிப்பாறைகள் சரிவு! ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு!!

உலகின் உயர்ந்த போர்க்களமாக கருதப்படும் சியாச்சினில் கொட்டும் பனியில் இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் 2 இடங்களில் பனிப்பாறைகள் சரிவு! ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு!!

உயிரிழந்த வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Srinagar:

வடக்கு காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பாகிஸ்தானையொட்டி உள்ள பகுதிகளில் பனிப்பாறைகள் இல்லாவிட்டாலும், வடக்கு காஷ்மீர் சியாச்சின் பகுதிகளில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. உலகின் உயர்ந்த போர்க்களமாக கருதப்படும் சியாச்சினில் கொட்டும் பனியில் இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு எதிரிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இயற்கைச் சூழல்கள்தான் ராணுவத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இங்கு அவ்வப்போது பனிச்சரிவு உண்டாகி வீரர்களை இரையாக்கி வருகிறது.

இந்த நிலயில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தந்த்கார் பகுதியில் நேற்று மதியம் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 வீரர்கள் சிக்கினர். இதையடுத்து மீட்பு பனிகள் தீவிரமாக நடந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 3 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று பந்திப்போரா மாவட்டம் குரேஸ் செக்டர் பகுதியில் மற்றொரு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வீரர்கள் 2 பேர் சிக்கினர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட மற்றொருவர் சடலமானார். 

உயிரிழந்த வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

.