This Article is From Jan 15, 2019

வரும் கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் 10%இடஒதுக்கீடு அமல்! - பிரகாஷ் ஜவடேகர்

இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் 25% அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீட்டுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • புதிய இடஒதுக்கீடு குறித்து விரைவில் அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் அறிவிக்
  • எதிர்கட்சியினர் 10% இடஒதுக்கீடு ஒரு ஏமாற்று வித்தை என்றனர்.
New Delhi:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் 25% அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய இட ஒதுக்கீடானது, ஏற்னவே இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையில் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். 

இந்த புதிய இடஒதுக்கீடானது அனைத்து தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என்றும் நாடுமுழுவதும் உள்ள 40,000 கல்லூரிகளிலும், 900 பல்கலைக்கழங்களிலும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதா பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2019 கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.8 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்போர், நகரப் பகுதியில் 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர் 10% இடஒதுக்கீட்டைப் பெற்று பயனடைவர்.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம், வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 
 

.