This Article is From Oct 07, 2018

நொய்டாவில் தயாராகிறது 10 ஆயிரம் கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி

டெல்லி அருகேயுள்ள உத்தரப்பிரதேச நகரான நொய்டாவில் 5 பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது

நொய்டாவில் தயாராகிறது 10 ஆயிரம் கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி

கட்டுமானப் பணியில் கார் பார்க்கிங் செய்யும் இடம்

Noida:

பிரமாண்டமான முறையில் நொய்டா நகரில் கார் பார்க்கிங் செய்யும் வசதி முழு வீச்சில் நடந்து வருகிறது. சுமார் 10 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் 5 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இவை வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமை அடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நொய்டாவில் உள்ள 3,5,1 38 ஏ மற்றும் 16 ஏ ஆகிய செக்டார்களில் மொத்தம் 810 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் பணிகள் நடக்கின்றன. இவற்றில் 16 ஏ-வை தவிர்த்து மற்ற 4 இடங்களில் அண்டர் கிரவுண்டாகவும், 16 ஏ-வில் மட்டும் மல்டி லெவல் முறையிலும் கார் பார்க்கிங் செய்யப்படவள்ளது.

இவற்றில் 38 ஏ செக்டாரில் அமைக்கப்படும் கார் பார்க்கிங்தான் மிகப்பெரியது. இங்கு மட்டும் 7 ஆயிரம் கார்கள் நிறுத்தப்படவுள்ளன. 16 ஏ-யில் 1400 கார்களை நிறுத்தலாம்.

சில வாரங்களுக்கு முன்பாக பார்க்கிங் பிரச்னையை கண்டித்து பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

.