This Article is From Sep 30, 2018

1,500 ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 1,500 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

1,500 ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படை தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 1,500 பேர் வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி அவர்களை விரட்டத் தொடங்கினர். இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் சேசுராஜா கூறும்போது, 275 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் விரட்டியடித்தனர். 10 மீன் பிடி வலைகளை சேதப்படுத்தினர். வெள்ளிக் கிழமையும் இதே சம்பவம் நடந்தது. அன்றைக்கு 600 மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தின்போதும் சுமார் 10 மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டன என்றார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.