This Article is From Dec 09, 2019

தெலுங்கானா என்கவுண்டரை விசாரிக்க கோரிய மனு : உச்ச நீதிமன்றம் ஏற்பு

சிறப்பு விசாரணை குழுவினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டுமென மற்றொரு வழக்கறிஞர் எம்.எஸ். சர்மாவும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தெலுங்கானா என்கவுண்டரை விசாரிக்க கோரிய மனு : உச்ச நீதிமன்றம் ஏற்பு

விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை தப்பிக்க முயன்றதாக கூறி சுட்டுக் கொன்றது(File)

New Delhi:

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களை விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை தப்பிக்க முயன்றதாக கூறி காலை 6.30 மணியளவில் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது. 

இந்த சம்பவம் பல்வேறு வகையில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான பெஞ்ச், வழக்கறிஞர் ஜி.எஸ் மணியின் மனுவினை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை கோரும் மனு அவசரமாக விசாரிக்கும் வழக்குகளில் வரிசையில் வைக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டது.

சிறப்பு விசாரணை குழுவினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டுமென மற்றொரு வழக்கறிஞர் எம்.எஸ். சர்மாவும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மணி மற்றும் வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் இந்த என்கவுண்டர் போலியானது என்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

.