மத்திய பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சிவப்பு மணல் பாம்பு

காவல்துறையினர், “அரிய விஷமற்ற பாம்பு சில மருத்துகள் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. சர்வதேச சந்தையில் இதற்கு தேவையும் அதிகம்”

மத்திய பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சிவப்பு மணல் பாம்பு

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. (Representational)

Rajgarh:

மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்கரில்   சுமார் 1.25 கோடி  மதிப்புள்ள சிவப்பு மணல் போவா பாம்பை  கடந்த முயன்ற 5 பேரை கைது செய்துள்ளனர். ஐந்து பேரில்  மூன்று பேர் வயதுக்கு வராத சிறுவர்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

காவல்துறையினர், “அரிய விஷமற்ற பாம்பு சில மருத்துகள் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. சர்வதேச சந்தையில் இதற்கு தேவையும் அதிகம்” 

இந்த வகை பாம்புகள் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

“எங்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உடனடியாக செயல்பட்டோம்” என்று காவல்துறை அதிகாரி கைலாஷ் பரத்வாஜ் கூறினார்.

“காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். பவன் நகர் மற்றும் ஷியாம் குர்ஜார் ஆகிய இருவரும் பாம்பை பிளாஸ்டிக் பையில் பாம்பை வைத்திருந்தனர். இரு வயது வந்தோரையும் மூன்று  வயது வராத சிறுவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தோம்” என்று கூறினார்.

ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த பாம்பு 1.25கோடி மதிப்பு என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் இருந்து பாம்பை வாங்கியதாகவும் அதை விற்க நர்சிங்க்கருக்கு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்ததாக” மேலும் கூறினார். 

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

More News