லட்டு மட்டுமே சாப்பிட கொடுத்த மனைவியிடம் விவாகரத்து கோரிய நபர்

விவாகரத்து கோருவதற்கான கவுன்சிலிங் மையத்தில் குடும்ப ஆலோசனை அதிகாரிகள் இந்த காரணத்தை கேட்டு குழப்பமடைந்தனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
லட்டு மட்டுமே சாப்பிட கொடுத்த மனைவியிடம் விவாகரத்து கோரிய நபர்

இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் உள்ளனர். (Representational)

Meerut: 

உத்திர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் நபர் தன் மனைவி தனக்கு சாப்பிட லட்டு மட்டுமே தருவதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

அந்த நபர் குடும்ப நீதிமன்றத்தை அணுகி தன் மனைவி தந்திர நம்பிக்கையில் தனக்கு சாப்பிட காலை 4 லட்டு மாலையில் சாப்பிட 4 லட்டு மட்டுமே சாப்பிடக் கொடுப்பதாகவும் இடையில் வேறு எதுவும் சாப்பிட அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் உள்ளனர்.

சிறிது காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அதற்காக அவரின் மனைவி தந்திரத்தை அணுகியதாகவும் தந்திரம் செய்யும் நபர் லட்டு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சொன்னதாகவும் தெரியவந்துள்ளது. 

விவாகரத்து கோருவதற்கான கவுன்சிலிங் மையத்தில் குடும்ப ஆலோசனை அதிகாரிகள் இந்த காரணத்தை கேட்டு குழப்பமடைந்தனர். 

“நாங்கள் தம்பதியினரை கவுன்சிலிங்கிற்காக அழைக்கவுள்ளோம். ஆனால் அந்த பெண்ணை மூடநம்பிக்கை கொண்டவர் என கருத முடியாது.  லட்டுகள் தன் கணவரை குணப்படுத்தும் என உறுதியாக நம்புகிறார்” என்று ஆலோசகர் தெரிவித்தார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................