This Article is From Apr 16, 2019

புதுச்சேரியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்.18ம்) தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும், புதுவையில், தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

புதுவை மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலை நியாயமாக நடந்தும் வகையிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் இன்று (ஏப்.16) மாலை 6 மணி முதல் 19ம் தேதி காலை 6 மணி வரை 60 மணி நேரத்திற்கு புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

144 அமலில் இருக்கும் நேரத்தில், 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாதைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

.