This Article is From May 18, 2019

தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு: ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விலக்கு கேட்ட லாவாசா!

சிறுபான்மை முடிவுகள் இறுதி செய்யப்படாத போது, முழு ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்கமால் நான் விலகி இருக்க நிர்பந்திக்கப்படுகிறேன் என தலைமை தேர்தல் ஆணையருக்கு, அசோக் லாவாசா கடந்த மே.4ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு: ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விலக்கு கேட்ட லாவாசா!

Election Commissioner Ashok Lavasa: தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா முழு ஆணைக்குழுவின் கூட்டங்களில் இருந்து விலகிக்கொண்டார்.

New Delhi:

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான விவகாரங்களில் கலந்துகொள்ள விலக்குக் கேட்டு தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின், மூவர் குழுவில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும். புகார்கள் குறித்து இந்த மூவர் குழு ஒரு மனதாக முடி வெடுக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கு, ஆணையர் அசோக் லாவாசா மே.4 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சிறுபான்மை முடிவுகள் இறுதி செய்யப்படாத போது, முழு ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்கமால் நான் விலகி இருக்க நிர்பந்திக்கப்படுகிறேன். ஆணைக்குழு கூட்டத்தில் நான் கலந்துகொள்வது அர்த்தமற்றதாகிறது. என்னுடைய சிறுபான்மையான முடிவுகள் பதிவு செய்யப்படாமல் போகிறது.

என்னுடைய கருத்துகள் பதிவு செய்யப்படாத போது நான் ஏன் ஆணையக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து, சுனில் அரோரா லவாசாவுடன் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டனர் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. ஆனால், இதுவரை மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

மாறாக, மோடி மற்றும் அமித்ஷா மீது கொடுக்கப்பட்ட 5 புகார்களில் எவ்வித விதி மீறல்களும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. ஆனால், ஆணையத்தின் இந்த முடிவுக்கு, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே எதிர்ப்பு இருந்ததாக தகவல் வெளியானது.

இதில், மோடி மற்றும் அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சி அளித்த 11 புகார்களில், தேர்தல் ஆணையம் இதுவரை 6 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது. அதில் 5 புகார்களுக்கு நற்சான்று அளிக்க தேர்தல் ஆணையரில் ஒருவரான அசோக் லவாசா எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்.21ல் குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் போது, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்காக உங்கள் வாக்கினை அளியுங்கள் என்று கூறினார்.

.