பணம் சம்பாதிக்கணுமா..?- 'தேர்தல் பிசினஸ்' பண்ணுங்க..!

700 கோடி ரூபாய் செலவில், மொத்தம் 90 கோடி மக்கள் வாக்குப்பதிவு செய்யும் உலகின் மிகப்பெரிய தேர்தல் இது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பணம் சம்பாதிக்கணுமா..?- 'தேர்தல் பிசினஸ்' பண்ணுங்க..!

கட்சிக் கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள், துண்டு பிரசுரங்கள், துண்டுகள், டீ-சர்ட்கள் ஆகியவைக்கு மிகுந்த வரவை ஈட்டித்தரும் தேர்தல்


இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல்கள் நடைபெறும். உலகின் மிகப் பெரிய தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம், தொண்ணூறு கோடி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். அவ்வளவு பெரிய வாக்குப்பதிவு எண்ணிக்கையை கொண்ட இந்த தேர்தலை மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். அதில் ஐந்து கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரு கட்ட தேர்தல் மீதமுள்ளது. இந்த தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் 700 கோடி ரூபாய் செலவில் நடத்தி வருவதாக தகவலை கூறுகிறது, புது டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம். இது கடந்த தேர்தலை காட்டிலும் 40 சதவிகிதம் அதிகம்.

இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மட்டும் பணத்தை செலவிடுவதில்லை. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், அதைவிட பல மடங்கு அதிக பணத்தை தங்கள் கட்சியின் பிரபலத்திற்காக செய்து வருகிறது. உங்களுக்கு கவர்ச்சிகரமான அரசியல் அடுக்கு மொழிகள் எழுத வருமா, நீங்கள் கட்சிக் கொடிகள், பேனர்கள் அச்சிடுபவரா, உருவ பொம்மைகளை நீங்கள் தயாரிப்பீர்களா, அல்லது உங்கள் நிறுவனம் தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்றவாரு வாகனங்கள் தயாரிக்கும் வல்லமை கொண்டதா? அப்படியென்றால் இந்த தேர்தலில் நீங்கள் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் உள்ளது.

இது குறித்து பஞ்சாப்பைச் சேர்ந்த லாக்கர் நிறுவனத்தின் இயக்குநர் சுன்சித் சோப்தி (Sunchit Sobti) கூறுகையில், "எங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்றவாரு வாகனங்களை தயாரிக்க பல ஆர்டர்கள் வருகின்றது. இதுவரை நாங்கள் 30-ல் இருந்து 35 வாகனங்கள் வரை தயாரித்து விற்பனை செய்துள்ளோம். 35 வாகனங்கள் என்பது ஒரு நல்ல எண்ணிக்கைதான்" என்று அவர் கூறுகிறார். வாகனங்களைப் பொறுத்தவரை  அதன் அமைப்பு, இஞ்சின், பிரச்சாரத்திற்கு ஏற்றவாரான டயர்கள் என இவை அனைத்தும் மற்றப்படும். சோப்தியின் நிறுவனத்தில் இந்த வேலைக்காக சுமார் 70 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இவ்வாறு ஒரு வானகத்தை மாற்றி அமைத்தால், சுமார் 6 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை பணம் கிடைக்கும். ஒரு வானத்தை மாற்றியமைக்க குறைந்தது மூன்று மாத காலம் தேவைப்படும் என சோப்தி கூறுகிறார்.

எப்படி அரசியல் சார்ந்த சினிமாக்களில் ஒரு கட்சி அல்லது ஒரு கட்சியின் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய ஒரு தனியார் நிறுவனம் பல வியூகங்களை மேற்கொண்டு பல உக்திகளை கையாலுகிறதோ, அதேபோல இங்கும் பல நிறுவனங்கள் அந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. ஒரு கட்சி அல்லது அந்த கட்சியின் வேட்பாளரை எடுத்துக்கொண்டால், அவருக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்தி, அவர் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், யாரைப் பார்த்துப் பேச பேண்டும் என்பது வரை இந்த நிறுவனங்கள் ஆராய்ந்து கூறுகின்றன. அவருக்கு அந்த தொகுதியில் என்ன செல்வாக்கு, எவ்வளவு வாக்குகளை தன் கைகளில் வைத்திருக்கிறார், அவரது பலம், பலவீனம் என அனைத்தையும் ஆராய்ந்து வைத்திருக்கிறது அந்நிறுவனம்.

இது குறித்து செய்ன்ட் ஆர்ட், என்ற இந்த தொழில் சார்ந்த ஒரு நிறுவனத்தில், தோற்றுனர் சுதன்சூ ராய் (Sudhanshu Rai) கூறுகையில், "ஒவ்வொருவரின் அடையாளமும் மிகுந்த கவனத்துடனேயே உருவாக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாரு அவர்களின் அடையாளங்களை தயார் செய்து நாங்கள் பிரபலப்படுத்துகிறோம். மேலும், அவர்கள் கல்வி அறிவு உள்ளவராக தங்களை காட்டிகொள்ள வேண்டும் என்றால் அவ்வாரும் செய்து தரப்படுகிறது" என்றார்.

மேலும் தேர்தல் சமையங்களில் ஹெலிகாப்டர்களில் சென்று இறங்குவதை ஒரு அந்தஸ்து என பல அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். அதனால் தேர்தல் நேரங்களில் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் பெரிதும் லாபமடைகிறது. ஒரு இஞ்சின் பொருத்திய ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா... ரூபாய் 1,50,000 மற்றும் இரண்டு  இஞ்சின் பொருத்திய ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூபாய் 2,50,000. 

மேலும், "தேர்தலின் போது, விளம்பரங்கள் வாயிலாக மட்டும், விளம்பர நிறுவங்கள் மொத்தமாக 2,500 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டுகின்றன. 20 முதல் 25 நிறுவனங்கள் இம்மாதிரியான விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றி வருகிறது. தேர்தல் நேரம் என்பதுதான் இந்த விளம்பர நிறுவனங்களின் வியாபாரம் கலைகட்டும் நேரம்" என்கிறார், உசாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ் ஹிரேமத்.

மேலும் கட்சிக் கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள், துண்டு பிரசுரங்கள், துண்டுகள், டீ-சர்ட்கள் என கட்சியின் பெயரை அதன் சின்னத்தை மற்றும் அதன் வேட்பாளரை பிரபலப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் இவ்வாரான செயல்கள் தேர்தல் நேரத்தில் மிகுந்த வரவை ஈட்டித்தருகிறது.  சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................