‘ஆஷா ஊழியர்களுக்கு இனி ரூ.10,000 சம்பளம்!’- ஜெகன் ரெட்டியின் அடுத்த அதிரடி

ஆந்திர பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடந்தது.

‘ஆஷா ஊழியர்களுக்கு இனி ரூ.10,000 சம்பளம்!’- ஜெகன் ரெட்டியின் அடுத்த அதிரடி

அங்கு மொத்தம் இருக்கும் 175 சட்டசபைத் தொகுதிகளில் 151 இடங்களைக் கைப்பற்றியது ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.

Amaravati, Andhra Pradesh:

ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி. அவர் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தற்போது அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் ‘ஆஷா' ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை 7,000 ரூபாய் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் இனி 10,000 ரூபாய் ஊதியம் பெற உள்ளனர். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஆஷா ஊழியர்கள். 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய கிராமப்புற சுகாதார சேவைத் திட்டத்தையொட்டி ‘ஆஷா ஊழியர்கள்' பணியமர்த்தப்பட்டனர். 

சுகாதாரத் துறை குறித்து ஆய்வு செய்த ஜெகன் மோகன் ரெட்டி, 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் சேவைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

அதே போல, ‘அரோக்யரசி' என்னும் திட்டத்தை ‘ஓய்.எஸ்.ஆர் அரோக்யரசி' என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். மாநிலத்தில் இருக்கும் பிரதான சுகாதார மையங்களின் செயல்பாடு குறித்த அறிக்கையையும் அரசு அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார். 

இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள ஜெகன், “சுகாதாரத் துறையில் நான் அதிக கவனம் செலுத்த உள்ளேன். என் நேரடி கண்காணிப்பில் இந்தத் துறை இருக்கும். அரசு மருத்துவமனைகளை, தனியார் மருத்துவமனைகளவிட சிறந்ததாக தரம் உயர்த்திக் காட்டுவேன்” என்றுள்ளார். 

Newsbeep

மேலும் சுகாதாரத் துறையில் இருக்கும் நிதிப் பற்றாக்குறை, காலி பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் இருக்கும் சுணக்கங்கள் குறித்து குறிப்பெடுத்துள்ளார். சீக்கிரமே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். 

ஆந்திர பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. அங்கு மொத்தம் இருக்கும் 175 சட்டசபைத் தொகுதிகளில் 151 இடங்களைக் கைப்பற்றியது ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.

பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய பிறகு கடந்த 30 ஆம் தேதி அவர் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார்.