இலங்கையை போல் கேரளாவிலும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம்!

இலங்கையில் கடந்த வாரம் நிகழந்த தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிமுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரியாஸ் தொடர்பில் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள ரியாஸ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

New Delhi:

இலங்கை தற்கொலைப்படை தாக்குலதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிமால் ஈர்க்கப்பட்டு, இலங்கையை போல் கேரளாவிலும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட 29 வயது இளைஞர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் ரியாஸ் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இலங்கையில் கடந்த வாரம் நிகழந்த தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிமால் ஈர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் ரியாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கடந்த ஒரு வருடமாக ஹாசிம் மற்றும் ஜாகீர் நாயக் பேச்சுகளை ரியாஸ் பின்தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்.21 நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது. ரியாஸிடம் நடந்த விசாரணையில் அவருக்கு தலைமறைவாக உள்ள குற்றவாளி அப்துல் ரஷித் அப்துல்லா உடன் தொடர்பு உள்ளாதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ரியாஸ் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என சமூகவலைதளங்களில் பரவி வரும் ரிஷித்தின் பேச்சுகளை தொடர்ந்து கேட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக அவர்களது வீடுகளில் நடந்த சோதனையில் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக கேரளாவை வீட்டுச் சென்றவர்களுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, இவர்களுக்கு இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.