This Article is From Nov 07, 2018

இஸ்லாமிய பெண்கள் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று சாதனை!

சோமாலிய அகதி மற்றும் பாலஸ்தீனிய குடியயேறியவர்களின் மகள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமையன்று வரலாறு காணாத விஷயத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இஸ்லாமிய பெண்கள் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று சாதனை!

சட்டமன்றத்தில் இனி இஸ்லாம் பெண்களின் எண்ணிக்கையை இவர்கள் அதிகரிக்க போராடுவார்கள்.

Chicago:

சோமாலிய அகதி மற்றும் பாலஸ்தீனிய குடியயேறியவர்களின் மகள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமையன்று வரலாறு காணாத விஷயத்தை அரங்கேற்றியுள்ளனர். இவரும் அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் இரண்டு இஸ்லாமிய பெண்கள் ஆவர்.

இஹான் ஒமர் (37) ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர், மின்னசோட்டா தொகுதியிலும், ரஷிதா தாலிப் (42) என்ற பெண் மிச்சிகன் தொகுதிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரின் அரசியல் கதைகளும் ஒன்று போன்றது. சட்டமன்றத்தில் இனி இஸ்லாம் பெண்களின் எண்ணிக்கையை இவர்கள் அதிகரிக்க போராடுவார்கள்.

இஹான் ஒமர்

"நான் ஒரு இஸ்லாமிய மற்றும் கறுப்பானப் பெண்," ஹிஜாப் அணிந்துகொண்டு ஒரு பத்திரிகை பேட்டியில் கூறினார்.

" ஜனநாயகத்தைத் தேடும் பல பெண்களின் பிரதிநிதியாக தான் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

சோமாலியாவில் நடந்த போர் ஒன்றில் அகதிகளாக தன் பெற்றோர்கள்களுடன் கென்யாவில் நான்கு வருடங்கள் வசித்து வந்தார். போரின்போது அவருக்கு வயது 8. 1997ஆம் ஆண்டு அவர்களின் குடும்பம் மின்னசோட்டா பகுதிக்கு குடிபெயர்ந்தது. 2016ஆம் ஆண்டு அவர் சோமாலிய நாட்டின் சட்டமன்றத்தில் வென்றார். அவர் அந்நாட்டின் முதல் சோமாலிய - அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரானார்.

அதன்பிறகு நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடினார். எல்லோருக்கும் இலவச கல்வி, வீடு என பலவற்றுக்கு மக்களுக்காக குரல் கொடுத்தார்.

ரஷிதா தாலிப்

ரஷிதா தாலிப், டெட்ராய்ட் நகரில் பிறந்த பாலஸ்தீனிய குடியேறிவர்களின் மகள். 14 பிள்ளைகளுக்கு இவர் மூத்தவர். 2016ஆம் ஆண்டு நடந்த பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-யை கடிந்துகொண்டார்.

"அநியாயங்களைக் கண்டு நான் ஓடத் தொடங்கினேன். ஆனால், அவர்கள் (இஸ்லாமியர்கள்) என்னுடைய அடையாளத்தைப் பற்றி கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள்" அமெரிக்க தொலைக்காட்சி பேட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிப் கூறியிருந்தார்.

எல்லோருக்கும் இலவச மருத்துவம், 15 டாலர் தேசிய ஊதியம், கட்டணம் இல்லாத கல்லூரி படிப்பு போன்ற பல திட்டங்களை அவர் முன் வைத்தார். வேட்பாளராக அவருக்கு இருக்கும் பொறுப்புகளை அவர் எப்போதும் கவனத்தில் கொண்டார். தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தன் தாயுடன் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அவரின் உறவினர்கள் அவரின் வெற்றியைப் பார்த்துகொண்டிருப்பார்கள் என்றார்.

"நம் நாடு எவ்வளவு அற்புதமானது என்பதைக் காட்டுகிறது" என்றார் அவர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.