This Article is From Oct 25, 2018

மிசோரம் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

மிசோரம் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!

மிசோரம் முதல்வராக இருக்கும் லால் தனாவ்லா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று பட்டில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

New Delhi:

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

மிசோரம் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மிசோரம் முதல்வராக இருக்கும் லால் தனாவ்லா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று பட்டில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டி, வேட்பாளர் பட்டியலை தயார் செய்தது. அதை தேர்தல் கமிட்டி தலைவர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டார். இந்நிலையில் முதல்வர் லால், தெற்கு சம்பாய் மற்றும் செர்ச்சிப் தொகுதிகளில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளுமே பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வட கிழக்கு மாநிலங்களில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இந்த முறை தேர்தலின் மூலம் அங்கேயும் காங்கிரஸின் ஆட்சிக்கு முடிவுகட்ட முயன்றுள்ளது பாஜக. நவம்பர் 2 ஆம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும். நவம்பர் 9 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வரும். நவம்பர் 28 ஆம் தேதி மிசோரமின் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும். 

.