ம.பி. பாஜக முதல்வரின் மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் கமல்நாத்தைப் போன்ற ஒருவர்தான் மத்திய பிரதேசத்திற்கு தேவை என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மசானி தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ம.பி. பாஜக முதல்வரின் மைத்துனருக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்த காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமை அன்று சஞ்சய் சிங் மசானி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.


மத்திய பிரதேசத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மசானிக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள மசானி, மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் போன்ற தலைவர்கள்தான் ஆள வேண்டும் என்றும், சிவராஜ் சிங் சவுகானுக்கு தகுதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களில் 213 பேரின் பெயர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. புதன் கிழமையன்று 29 பேரின் பெயர் வெளியிடப்பட்டது. இதில் மசானியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
மீதம் உள்ள 17 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................