அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு

மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: விடைத்தாள் மறுமதிப்பீட்டின் போது முறைகேடில் ஈடுபட்டதால், அண்ணா பல்கலை முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் தேர்வுகள் எழுதிய மாணவர்கள், விடைத்தாள் மறுமதிப்பீட்டு கோரி விண்ணப்த்திருந்தனர். மறுமதிப்பீடு செய்து வெளிவந்த தேர்வு முடிவுகளில், பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது தெரிய வந்துள்ளது.

மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணா பல்கலை முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார், மற்றும் 7 பேராசிரியர்கள் மிது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்கிலும் நடைப்பெற்ற சோதனையில், விடைத்தாள் மறுமதிப்பீடு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................