This Article is From Nov 22, 2018

‘காங்கிரஸ், பாஜக-வை நம்பவே முடியாது!’- தெலங்கானா முதல்வர் காட்டம்

டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி, தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

‘காங்கிரஸ், பாஜக-வை நம்பவே முடியாது!’- தெலங்கானா முதல்வர் காட்டம்

டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி, தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

Hyderabad:

தெலங்கானாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சகோதரர்கள் போல, அவர்களை நம்பவே முடியாது' என்று பேசியுள்ளார்.

தேவாரகொண்டாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்று போலவே. அவர்களை நம்பவே முடியாது. தெலங்கானா தேர்தல் முடிந்த பிறகு நான் தேசிய அரசியலிலும் நுழைவேன்' என்றார்.

அவர் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தார், ‘நலகோண்டா மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்படும். ஆனால், அண்டை மாநிலத்தின் முதல்வரான சந்திரபாபு நாயுடு வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் வகையில் மத்திய அரசுக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார். தற்போது இந்த மாவட்டத்தில் எப்படி குற்ற உணர்ச்சி இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும்' என்று கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து, ‘மீண்டும் ஆட்சியில் அமரும் போது, என் தலைமையிலான அரசு புதிய சுகாதாரத் திட்டத்தை தெலங்கானா மாநிலத்தில் அமல்படுத்தும். அதன் மூலம் எளிய மக்கள் பெருமளவும் பயனடைவார்கள். மகாபூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நிலையான பாசன வசதி செய்து தரப்படும்' என்று உரையாற்றினார்.

டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி, தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

.