This Article is From Aug 12, 2020

பார்ப்பதற்கு கருப்பு புலி போலிருக்கும் இப்படியொரு விலங்கை பார்த்ததுண்டா.. வீடியோ

இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளாக் பாந்தர் அல்ல.

பார்ப்பதற்கு கருப்பு புலி போலிருக்கும் இப்படியொரு விலங்கை பார்த்ததுண்டா.. வீடியோ

"தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்டன் இனம்"

சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. முதல் பார்வையில், இது ஒரு கரும்புலி (பிளாக் பேந்தர்) என்று தோன்றுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் புலி போன்றோ பெரி பூனை போன்றோ இருக்கலாம். ஆனால், கேமராவை ஜூம் செய்யும் போது தான் அது புலியும் அல்ல பூனையும் அல்ல என்பது தெரிகிறது. மாறாக வேறு ஒரு ஜீவ ராசி ஆகும்.

இதன் பெயர் கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின். தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். இவை மாமிச உண்ணிகள் என்று அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் நீலகிரி மலைகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. 

இந்த நிலையில் தான், ஒரு நீலகிரி மார்ட்டின்  கேமராவில் சிக்கியுள்ளது, அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர், "இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளாக் பாந்தர் அல்ல. இது நீலகிரி மார்டன், மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு பகுதிகளில் தென்படுகிறது. இது ஆபத்தில் இருக்கும் மற்றும் அழிந்து வரும் ஒரு ஆர்போரியல் விலங்கு. தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்டன் இனம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

கரும்புலி போல் இருக்கும் 'நீலகிரி மார்ட்டின்' விலங்கு:

இந்த வீடியோ ட்விட்டரில் கிட்டத்தட்ட 31,000 பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமென்டுகளைப் பெற்றுள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் இது போன்ற ஒரு விலங்கு பற்றி முதலில் கேள்விப்பட்டதாக கூறுகின்றனர்

Click for more trending news


.