This Article is From Oct 24, 2018

பாஜக ஆளும் மூன்றில் 2 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும்: கருத்து கணிப்பு முடிவுகள்

கருத்து கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், சத்தீஸ்கரில் சிறிய சதவிகிதத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

பாஜக ஆளும் மூன்றில் 2 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும்: கருத்து கணிப்பு முடிவுகள்

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக ஆட்சி புரிந்து வரும் பாஜக, 4வது முறையாகவும் அங்கு வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது
  • ம.பி-யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது
  • 5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளிவரும்
New Delhi:

இன்னும் ஒரு மாதத்தில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாஜக தற்போது ஆட்சி புரிந்து வரும் மூன்றில் 2 மாநிலங்களைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. கருத்து கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், சத்தீஸ்கரில் சிறிய சதவிகிதத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக ஆட்சி புரிந்து வரும் பாஜக, 4வது முறையாகவும் அங்கு வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. 

காங்கிரஸ் 2 மாநிலங்களில் வெற்றி பெறும் பட்சத்தில், பாஜக-வுக்கு எதிராக அணி சேர காத்திருக்கும் எதிர்கட்சிகளுக்கு அது மிகப் பெரும் உந்துதலாக இருக்கும் எனத் தெரிகிறது.

h4aodu1g

அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தற்போது நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது

மத்திய பிரதேசத்தில் இருக்கும் 230 தொகுதிகளில் பாஜக, 126 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. 2013-ல் அந்தக் கட்சி 165 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காங்கிரஸ் சென்ற தேர்தலில் 58 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்தக் கட்சி 97 இடங்களைப் பெறும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. 116 இடங்களைப் பெற்றால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடியும். 

jm3oubdo

காங்கிரஸ் வெற்றி எதிர்கட்சிகளுக்கு உந்துதலாக இருக்கும்

ராஜஸ்தானில் வழக்கமாக ஆளுங்கட்சி வீழ்த்தப்பட்ட எதிர்கட்சி ஆட்சி அமைக்கும் நடைமுறை இருக்கிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013-ல் காங்கிரஸ், மொத்தம் இருக்கும் 200 தொகுதிகளில் 21-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் இந்த முறை அந்தக் கட்சி 129 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. 2013 ஆம் ஆண்டு 163 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை வெறும் 63 இடங்களில் மட்டுமே கைப்பற்றும் என்றும் தெரிய வந்துள்ளது. 101 இடங்களில் வெற்றி பெற்றால், ராஜ்தானில் ஆட்சி அமைக்க முடியும்.
 

i3vehg7o

சத்தீஸ்கரில், குறைந்த சதவிகிதத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைகற்ற வாய்ப்புள்ளது

சத்தீஸ்கரில் தொடர்ந்து 4வது முறையாக பாஜக ஆட்சி அரியணையில் அமர முயன்றுள்ளது. ஆனால், கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் மிக குறைந்த சதவிகிதத்தில் சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 2013-ல் காங்கிரஸ், மொத்தம் உள்ள 90 இடங்களில் 39 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த முறை அந்தக் கட்சி, 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. அதே நேரத்தில் 49 இடங்களை கைவசம் வைத்துள்ள பாஜக, இந்த முறை 39 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்களில் வெற்றி வேண்டும்.

tg2nn8ho

காங்கிரஸுக்கு தெலங்கானாவில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ், சீக்கிரமாகவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நடவடிக்கை எடுத்தது, மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

சந்திரசேகர் ராவின், தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இருக்கும் 117 இடங்களில் டிஆர்எஸ், 85 இடங்களைக் கைப்பற்றும் என கருத்து கணிப்பு சொல்கிறது. காங்கிரஸுக்கு 18 இடங்களும், பாஜக-வுக்கு 5 இடங்களும், ஏஐஎம்ஐஎம்-க்கு 7 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் பெரும்பான்மையை நிரூபிக்க 60 இடங்கள் தேவை.


 

.