மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிநுட்ப நிறுவனம் ஆரஞ்சு கவுண்டி. `என் ஃபேஸ்' என்கிற தொழிநுட்பத்தின் மூலம், கற்பனைக் கதாபாத்திரங்களையும், கடந்த காலத்தை சேர்ந்த நபர்களையும், நிகழ்கால நபர்களையும் உயிரோட்டமாக திரையில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முதல் படியாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களை மீண்டும் உயிரோட்டமாக திரையில் கொண்டு வர இருக்கிறது. இதில் எம்.ஜி.ஆரை ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்து கதை சொல்ல இருக்கிறார்கள். இது பற்றி ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் சேர்ந்த விமலநாதன் மற்றும் வெங்கடேசன் பேட்டி அளித்துள்ளனர்