கடும் தண்ணீர் பிரச்னையை சந்திக்கும் தமிழகத்தின் தலைநகர்

PUBLISHED ON: June 20, 2019 | Duration: 2 min, 34 sec

  
loading..
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன, நிலத்தடி நீரின் அளவும் கடுமையாக குறைந்துவிட்டது. இதன் வ்ளைவாக, சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரில் சுமார் 40 சதவிகிதம் தண்ணீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமின்றி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பள்ளிகளில் விடுமுறை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................