This Article is From Apr 18, 2019

தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு சென்னை ஹோட்டல் கொடுக்கும் அதிரடி தள்ளுபடி

Lok Sabha Polls 2019: தேர்தலில் வாக்களித்த நபர்களுக்கு உணவுக்கான தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி என்று  பிரபல உணவகமான க்ளாரியன் ஹோட்டலின் தலைவர் அறிவித்துள்ளார்

தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு  சென்னை ஹோட்டல் கொடுக்கும் அதிரடி தள்ளுபடி

உணவுக்கான தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி என்று  பிரபல உணவகமான க்ளாரியன் ஹோட்டல் தெரிவித்துள்ளது

Chennai:

தமிழகத்தின் நாடாளுமன்ற 38 தொகுதிகளிலும் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களித்த நபர்களுக்கு உணவுக்கான தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி என்று  பிரபல உணவகமான க்ளாரியன் ஹோட்டலின் தலைவர் அறிவித்துள்ளார். 

“விருந்தினர்களுக்கு உணவுக்கான தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கொடுக்கவுள்ளோம். வாக்களித்தற்கான அடையாளத்தைக் காட்டினால் காலை, மதியம் மற்றும் இரவு உணவு என்று மூன்று வேளைக்கும் தள்ளுபடியை வழங்குகிறோம்” என்று ஹோட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில மால்களில் உள்ள உணவகங்களில் இந்த ஆஃபரை வழங்கி வருகின்றனர். 

தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 

.