This Article is From May 25, 2019

வங்கத்தில் ‘ஷாக்’ தேர்தல் முடிவு: கவிதை மூலம் எதிர்வினையாற்றிய மம்தா!

மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக, மொத்தம் இருக்கும் 42 இடங்களில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

வங்கத்தில் ‘ஷாக்’ தேர்தல் முடிவு: கவிதை மூலம் எதிர்வினையாற்றிய மம்தா!

2014 ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

New Delhi:

மேற்கு வங்கத்தில் பாஜக, இந்த முறை கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் முடிவு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கவிதை மூலம் எதிர்வினையாற்றியுள்ளார் மம்தா. 

மம்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘நான் ஏற்றுக் கொள்ளவில்லை' என்ற கவிதைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “மதவாதத்தைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்று பெயர் குறிப்பிடாமல் சூசகமாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இதைப் போன்ற கருத்துகளால் கவிதை நிரம்பியுள்ளது. அவரின் இந்தக் கவிதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை குறிப்பதாகத் தெரிகிறது. 
 

மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக, மொத்தம் இருக்கும் 42 இடங்களில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. திரிணாமூல், 22 இடங்களைக் கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில், அந்தக் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாகவே, மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கும் திரிணாமூலுக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்னை வந்தது. குறிப்பாக பாஜக-வின் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மதம் சார்ந்த விழாக்களுக்கு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. 

அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மேற்கு வங்கத்தில் கடுமையாக பிரசாரம் செய்தனர். மோடி-அமித்ஷா மற்றும் மம்தா ஆகியோர் இடையில் பிரசாரங்களின் போது தொடர்ந்து வாதப் போர் நடந்தது. 

.