கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் | Read

PUBLISHED ON: July 9, 2019 | Duration: 4 min, 57 sec

facebooktwitteremailkoo
loading..
கர்நாடகாவில் காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று முதல்வர் குமாரசாமி சவால் விடுத்துள்ளார். கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக இருப்பவர்கள் 118 பேர் ஆவர். மெஜாரட்டிக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதுமானது என்ற சூழலில், கூட்டணி ஆட்சிக்கு மெஜாரிட்டியை விட கூடுதல் ஆதரவுதான் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் காங்கிஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இந்த நிலையில் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று ராஜினாமா செய்தார். இதனால் மொத்தம் 14 பேர் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். நாளை இந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், 14 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி காலியாகி விடும். இதையடுத்து 118-ல் 14 போக 104 உறுப்பினர்கள் பலம் மட்டுமே இருந்தால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. எதிர்த்தரப்பில் பாஜகவுக்கு ஆதரவாக 106 உறுப்பினர்கள் உள்ளனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com