புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் இறந்தது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யா துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடி புதினக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் தங்களது நட்புறவு மேலும் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.