கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!

Updated: May 15, 2018 16:45 IST

கர்நாடகா தேர்தல் முடிவுகளில் பாஜக 106 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முன்னணி வகுக்கிறது. 76 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது பெரும் கட்சியாக திகழும் ஜனதாதளம் கட்சியுடன் நிபந்தனையற்ற உடன்படிக்கை கொண்டு கூட்டணி மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் - ஜனதாதளம் கூட்டணி கட்சிகள் ஆளுநர் வாஜ்பாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
ஜனதாதளம் ஆட்சி அமைக்க முழு ஒத்துழைப்பு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
காங்கிரஸ் அறிவிப்பை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தேவ கவுடா இல்லத்தின் முன் குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் குமாரசாமி முதல்வராக ஒப்புதல் தெரிவித்தனர். பெங்களூரில் குமாரசாமி தனது கட்சி ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி பெங்களூரில் உள்ள ஆளுநர் அலுவலகம் செல்கிறார்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
எங்களுக்கு போதிய நேரம் கொடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
குமாரசாமி ஆளுநரை சந்திப்பதற்கு முன்னதாக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா ஆளுநரை சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரிக்கை விடுத்தார்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
ராஜ்பவனில் குமாரசாமி, சித்தராமையா, குலாம் நபி ஆசாத், டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். ஆளுநரின் அனுமதி கோரி இரண்டு கட்சிகளும் கடிதம் வழங்கியுள்ளோம் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
இதனிடையே பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில், மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா தேர்தல் முடிவு 2018: பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி!
பாஜக ஆதரவாளர்கள் பலரும் டெல்லி தலைமை அலுவலகம் வருகை தந்துள்ளனர்.

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com