மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Updated: March 04, 2019 19:48 IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பரிவர்த்தன் உல்குலான் மகா பொதுக்கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் மெராபாதி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர்களுடன் ராகுல் பங்கேற்றார்.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு குறைந்தபட்ச உதவித் தொகை உறுதி செய்யப்படும் என்றும் ஏழை மக்களுக்கான இந்த தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் ராகுல் கூறினார்.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
ஜார்க்கண்ட் மாநிலம்தான் வேலையின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாகவும் ராகுல் பேசினார்.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
ஆதிவாசிகள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
வெள்ளை குர்தாவுடன், உத்தாரியா எனப்படும் பாரம்பரிய சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டு ஆதிவாசி மக்களுடன் ராகுல் நடனம் ஆடினார். ஜார்க்கண்டில் அவர் செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் வெள்ளியன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். குடிசைவாழ் மக்ளுக்கு 500 சதுர அடி அளவில் வீடு கட்டித் தரப்படும் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் இதனை செய்து முடிப்போம் என்றும் ராகுல் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் பிரசாரக் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மும்பை கூட்டத்தில் பேசிய ராகுல் இந்தியாவின் ஆன்மா மும்பை என்று குறிப்பிட்டார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com