வருண் காந்தி போட்டியிடும் உ.பி-யின் பிலிபித்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு!

PUBLISHED ON: April 20, 2019 | Duration: 5 min, 21 sec

  
loading..
உத்தர பிரதேச பிலிபித் தொகுதியில் வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இருந்து மேனகா காந்தி 6 முறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் ஹேம்ராஜ் வர்மா, வருண் காந்திக்கு எதிராக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார். இந்த இருவருக்கும் இடையில்தான் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................