பட்டப்படிப்பை முடிக்கவில்லை: வேட்புமனுவில் ஸ்மிருதி இரானி பகீர் தகவல்!

PUBLISHED ON: April 12, 2019 | Duration: 2 min, 21 sec

  
loading..
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி தனது வேட்பு மனு தாக்கலில் தாம் பட்டபடிப்பு முடிக்கவில்லை என கூறியுள்ளார். இந்த முறையே வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதி குறித்த விவரங்களை ஸ்மருதி இரானி சரியாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, 3 வருட பட்டப்படிப்பை தான் முழுமையாக முடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதே தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவரை எதிர்த்து ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்தது பாஜக.

................... Advertisement ...................
................... Advertisement ...................