சர்ச்சையில் ஸ்மிர்தி இராணியின் படிப்பு தகுதி.

PUBLISHED ON: April 13, 2019 | Duration: 2 min, 49 sec

  
loading..
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதே தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவரை எதிர்த்து ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்தது பாஜக. இந்நிலையில், அமேதியில் நேற்று ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல் செய்தார். அமேதியில் நேற்று முன்தினம் ராகுல் காந்தி ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் நேற்று ஸ்மிருதியும் தனது கணவர் சுபின் இராணியுடன், பாஜக தொண்டர்கள் படைசூழ ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில், உயர்கல்வி தகுதியில், டெல்லி பல்கலைக்கழத்தில் தொலைத்தூரக் கல்வியாக (பி.காம்) இளங்கலை வணிகவியல் படித்ததாகவும், ஆனால், 3 வருட பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானி, 42 தனது வேட்புமனு தாக்கலில் 1994ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு முடித்தாக தவறான தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபிலுக்கு எதிராக போட்டியிட்ட அவர், தனது வேட்புமனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1996ல் பி.ஏ பட்டப்படிப்பை முடித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................