ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடியின் முதல் செய்தியாளர்க்ள் சந்திப்பு

PUBLISHED ON: May 17, 2019 | Duration: 36 min, 59 sec

  
loading..
பிரதமர் ஆன 5 அண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அமித் ஷா உடன் இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா பேசியபோது, ‘செய்தியாளர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. இன்னும் மற்றொரு 5 ஆண்டுகள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமரப் போகிறோம். 2014-ல் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது. இதனை மோடியின் விளைவு என்று நாங்கள் அழைத்தோம். இப்போது நாங்கள் கூடுதல் பலத்துடன் இருக்கிறோம். எனவே மெஜாரிட்டி கிடைப்பது உறுதி' என்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது- காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தேர்தல் நடந்தபோது ஐ.பி.எல். மேட்ச் கூட இங்கு நடக்கவில்லை. ஆனால் என்றைக்கு எங்கள் வலிமையான அரசு ஆட்சிக்கு வந்ததோ, அன்று முதல் ஐ.பி.எல்., ரம்ஜான், பள்ளித் தேர்வுகள் உள்ளிட்டவை மிகவும் அமைதியாக நடைபெறுகின்றன. எங்கள் அரசு மீண்டும் 2-வது முறையாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும். மக்கள் பாஜகவை தங்கள் மனதில் நிறுத்தியுள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதன் வலிமையை மக்கள் கொண்டாட வேண்டும். உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். உங்கள் ஆசிர்வாதத்தால் நான்கடந்த 5 ஆண்டுகளாக நாட்டிற்கு உழைத்தேன். மீண்டும் எனது பணியை விரைவில் தொடங்கி உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். நாட்டில் மீண்டும் ஒரு அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவது என்பது அபூர்வமான ஒன்று. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை என சமூக வலைதளங்கள் இரட்டை நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................