ப.சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ்! முன்ஜாமின் வழக்கை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

PUBLISHED ON: August 21, 2019 | Duration: 0 min, 38 sec

  
loading..
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் இந்த வழக்கை தற்போது உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 2-வது நாளாக ப.சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததால் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................