முடிவுக்கு வந்த முன்னாள் பிரபஞ்ச அழகியின் பிரச்சனை, 7 பேர் கைது

PUBLISHED ON: June 19, 2019 | Duration: 1 min, 18 sec

  
loading..
முன்னாள் பிரபஞ்ச அழகியான உசோஷி செங்குப்தா, கொல்கத்தாவில் தனது ஊபர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, 7 பேர் அவரின் காரினை வழிமறித்து அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். மேலும், அவர்களை தன் மொபைல்போனில் படமெடுக்க உசோஷி முயற்சிக்கையில், அந்த போனையும் பறிக்க முயற்சித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை இன்று கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. முன்னதாக, இவர் புகார் அளிக்க சென்ற இரண்டு காவல் நிலையங்களில் புகார் எடுத்துக்கொள்ளப்படவில்லை, மூன்றாவது காவல் நிலையத்திலே தான் புகார் பதிவு செய்யப்பட்டது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................