பாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

PUBLISHED ON: June 18, 2019 | Duration: 3 min, 08 sec

  
loading..
பாஜக செயல் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார். பாஜகவில் சமீபத்தில் வெளியான அறிவிப்புகளில் இது முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. பாஜக தேசிய தலைவராக இருக்கும் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவர் கட்சியின் தலைவர் பொறுப்பில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களுக்கு அவர்தான் கட்சித் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................