தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம்

PUBLISHED ON: June 25, 2019 | Duration: 3 min, 01 sec

  
loading..
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................