தேர்தலை குறித்து தயாநிதி மாறன்

PUBLISHED ON: March 28, 2019 | Duration: 2 min, 59 sec

facebooktwitteremailkoo
loading..
கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய சென்னை மக்களவை தொகுதியின் உறுப்பினராக தயாநிதி இருந்தார். தற்போது இங்கு 4 முனைப் போட்டி காணப்படுகிறது. இந்த முறை திமுகவின் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சாம் பால், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமீலா நாசர் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெஹ்லான் பாகவி ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். 2014-ல் திமுகவும் காங்கிரசும் தனித்தனியே போட்டியிட்டன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருக்கின்றன. வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னர் என்.டி.டி.வி.க்கு பேட்டியளித்த தயாநிதி மாறன், ''எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளார். தமிழகத்திற்கு எதுவும் செய்யாததால் பிரதமர் மோடிக்கு எதிரான அலை தமிழகம் முழுவதும் வீசுகிறது. அவர் கஜா புயல் வந்தபோது தமிழகம் வரவில்லை. தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்காக மட்டும் அவர் வந்து அடிக்கல்லை நாட்டுகிறார்'' என்று கூறினார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com