தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் ட்விட் …!!!

PUBLISHED ON: March 16, 2019 | Duration: 0 min, 40 sec

  
loading..
லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேசிய தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளிதான்' என்கின்ற புதிய பிரசார ட்விட்டை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, ‘உங்கள் காவலாளி தேசத்துடன் துணை நிற்கிறார். ஆனால், நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழலை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார்களோ அவர்கள் எல்லாம் காவலாளிகள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைத்து இந்தியர்களும் ‘நானும் காவலாளிதான் என்று கூறுகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................