முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

PUBLISHED ON: March 22, 2019 | Duration: 3 min, 59 sec

  
loading..
பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அடங்கிய பாஜக உயர் மட்டக்குழு கூட்டத்தில் 184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். நாக்பூரில் நிதின் கட்கரியும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் போட்டியிடுகின்றனர். அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் வி.கே. சிங் காஜியாபாத் தொகுதியிலும், ஹேம மாலினி மதுராவிலும், சாக்ஷி மகராஜ் உன்னாவோவிலும் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே போட்டியிடவில்லை. அவரது மகன் துஷ்யந்த் 4-வது முறையாக போட்டியிடுகிறார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................