மேற்கு வங்க பசிராத்தில் மல்லுக்கட்டும் திரிணாமூல் - பாஜக!

PUBLISHED ON: April 25, 2019 | Duration: 15 min, 21 sec

  
loading..
மேற்கு வங்கத்தின் பசிராத் மக்களவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமூல் சார்பில் நடிகை நுஸ்ரத் ஜஹான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் சயந்தன் போட்டியிடுகிறார். ஜஹான் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ‘நான் அரசியலுக்குத் தயாராகவே இருக்கிறேன். உண்மையுடன் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பேன்’ என்றுள்ளார் ஜஹான். சயந்தன் பேசுகையில், ‘மேற்கு வங்க மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே பாஜக, இந்தத் தொகுதியில் வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................